இலங்கை மத்திய வங்கியின் Econ Icon - Season IV (2019) - LK Updates

Tuesday, November 27, 2018

demo-image

இலங்கை மத்திய வங்கியின் Econ Icon - Season IV (2019)



Econ+copy


இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கிடையிலான பொருளியல் பாட வினாடி வினாப்போட்டி -2019 Econ Icon - Season IV 

இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Econ Icon என்ற பொருளியல் வினாடி வினாப்போட்டி 2019 இன் முதலாவது காலாண்டில் நடைபெறவுள்ளது.

கல்வி அமைச்சினால் குறித்துரைக்கப்பட்ட உயர்தர வகுப்பில் பொருளியல் பாடத்தினை கற்கின்ற ஆர்வமிக்க சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வினாடி வினா நிகழ்ச்சியானது எழுத்துமூல பரீட்சை ஒன்றிணையும் பல தொலைக்காட்சி ஒளிபரப்பு சுற்றுக்களையும் உள்ளடக்குவதுடன் எழுத்து மூலப்பரீட்சையில் சித்தி அடைகின்றவர்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சுற்றுகளுக்கு தகைமைபெறுவர்.

ஒவ்வொரு அணியும் மூன்று போட்டியாளர்களை உள்ளடக்குதல் வேண்டும் பொருளியலை ஒரு பாடமாக கற்பிக்கின்ற அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகள் இந்நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு தகைமை உடையன பதிவு செய்து கொள்வதற்கு தயவுசெய்து கீழே உள்ள விண்ணப்பப்படிவத்தை Download செய்து உரிய  தகவல்களுடன் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை

பணிப்பாளர், 
தொடர்பூட்டல் திணைக்களம்,
இலங்கை மத்திய வங்கி, 
அஞ்சல் பெட்டி 590 கொழும்பு.

என்ற முகவரிக்கு 2018-11-30 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கவும். 

To Download Application Form
small+download+copy

No comments:

Post a Comment

Post Bottom Ad

Contact Form

Name

Email *

Message *